Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது

அட்மின் மீடியா
0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தமிழ்நாட்டில் 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. 

தமிழகத்தில்  சென்னை, மதுரை ,திண்டுக்கல் ,கடலூர் ,தேனி, ராமநாதபுரம், தென்காசி ,கோவை ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தில் 10, ஆந்திராவில் 5, அசாமில் 9, டெல்லியில் 3, கர்நாடகாவில் 20, கேரளாவில் 22, மத்திய பிரதேசத்தில் 2, மகாராஷ்டிராவில் 20, புதுச்சேரியில் 3, ராஜஸ்தானில் 2, உத்தரபிரதேசத்தில் 8 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் தலைவர் முஹம்மது சேக் அன்சாரி, வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம், மாநில துணைத் தலைவர் வீடு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) சோதனை மேற்கொண்டு வருகின்றது. இது பாஜக அரசின் அரசியல் உள்நோக்கம் கொண்ட கொழைத் தனமான செயல்பாடு. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மக்கள் விரோத செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் அனைவர்களையும் அச்சுறுத்த என்.ஐ.ஏ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி அச்சுறுத்த நினைக்கின்றது. மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட்-ஐ அச்சுறுத்தவோ, முடக்கவோ முடியாது. மக்கள் விரோத, நாசகார செயல்களில் ஈடுபட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சுதந்திரமாக செயல்படுகின்றது.

அந்த அமைப்பின் உறுப்பினர் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகளுக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் உடைய கை இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த அவர்களைப் பற்றி எந்த விசாரணை அமைப்புகளும் விசாரிப்பதற்கு தயாராக இல்லாத நிலையில் மக்கள் சேவையை தங்களுடைய லட்சியமாக கொண்டு செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் மீது வஞ்சகத்தோடு செயல்படும் பாஜக அரசின் எந்த நிகழ்வும் அராஜகமானது. இத்தகைய ஜனநாயக விரோத பாஜக அரசின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback