பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள்- பள்ளி கல்விதுறை அறிவிப்பு
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வகுப்புகள் நடத்தவும் மேலும் சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி அளித்து பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளிகளில் 10,11, 12 வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது என அமைச்சர் அறிவித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்றும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தலாம் என்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனுமதி வழங்கியிருக்கிறார்.மாவட்ட கலெக்டர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்படட முடிவுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
Tags: கல்வி செய்திகள்