இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் ...முழு விவரம்
அட்மின் மீடியா
0
டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் ( சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ) சேர்க்கைக்கான தகுதி தேர்வு ஜூலை 2023 பருவத்திற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அதில்
விண்ணப்பதாரர்களின் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் 1.1.2023 ஆம் தேதி கணக்கீட்டின்படி 11 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராக அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு முதற்கட்டமாக எழுத்து தேர்வு வரும் ஜூலை 2023 அன்று நடைபெற உள்ளது. அதில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:-
Tags: இந்திய செய்திகள் கல்வி செய்திகள்