Breaking News

வாட்ஸ்அப் அட்மின்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இனி யார் மெசஜ் செய்தாலும் நீங்க டெலிட் செய்யலாம். எப்படி

அட்மின் மீடியா
0
உலகம் முழுவதும் மக்கள் வாட்ஸப் உபயோகித்து வருகின்றார்கள், வாட்ஸப் இல்லத போன் இல்லை என்றே சொல்லாம்.இதன் வாயிலாக நாம் கோப்புகள், ஆடியோ, வீடியோ என எல்லாவற்றையும் அனுப்ப முடியும். whatsapp நிறுவனம் அதன் பயனர்களுக்கு புதுப்புது அப்டேட்டுகளை அள்ளி வழங்கி வருகிறது.



பேஸ்புக் நிறுவனம் வாட்ஸப்பை வாங்கியவுடன் வாட்ஸப்பில் பல மாறுதல்கள் செய்து அடிக்கடி தன் பயனாளர்களுக்கு பல அப்டேட் கொடுத்து வருகின்றது. 

மெசேஜ்களை டெலிட் செய்யும் வசதி:-

நாம் அனுப்பிய குறுந்தகவலை, சம்பந்தப்பட்டவர் பார்க்கும் முன் delete for everyone என்ற வசதியை பயன்படுத்தி இரு பக்கமும் நிரந்தரமாக அதை அழிக்கலாம். ஆனால், இதற்கான காலக்கெடு, ஒரு மணி நேரம் 8 நிமிடம் மட்டுமே என்பது. இனி வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை இரண்டரை நாட்கள் வரை நிரந்தரமாக அழிக்கும் வசதியை வாட்ஸப் அறிமுகப்படுத்தி உள்ளது. 

மேலும் தற்போது வாட்ஸப் ஸ்டேட்டசில் இதுவரை புகைப்படங்கம், லிங்க் மற்றும் வீடியோக்களையே பதிவு செய்து வருகின்றனர். தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய அப்டேட்டின் மூலம் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டசில் வைக்க முடியும். இந்த வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

அந்த வரிசையில் தற்போது 

வாட்ஸப்பில் ஒரு அதிரடியான அப்டேட் வந்துள்ளது.அது என்னவென்றால், அட்மின்களுக்கான டெலிட் மெசேஜஸ் ஃபார் எவ்ரிஒன் (Delete messages for everyone) என்கிற அம்சம் ஆகும். 

இதுநாள் வரையிலாக 'டெலிட் மெசேஜஸ் ஃபார் எவ்ரிஒன்' என்கிற அம்சம் தனிப்பட்ட நபர்களுக்கான ஒரு அம்சமாகவே வாட்ஸ்அப்பில் கிடைக்கிறது. ஆனால் இனிமேல் அது க்ரூப் அட்மின்களுக்கும் இது கிடைக்கும்.

அதாவது இனிமேல் வாட்ஸ்அப் குருப்பில் யார் மெசேஜ்களை அனுப்பினாலும் அதனை அட்மின்கள் டெலிட் செய்ய முடியும்.

அப்பறம் என்ன உடனே உங்க வாட்ஸப்பை அப்டேட் செய்யுங்க, அவ்வளவுதான்.


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback