Breaking News

2-வது மனைவிக்கு உரிமையில்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அட்மின் மீடியா
0

இமாச்சலப் பிரதேச காவல்துறையில் 1983 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர் பஹொலா ராம். இவர் கடந்த 2002-ம் ஆண்டு உயிரிழந்தார். பஹொலா ராமிற்கு ராம்கு தேவி மற்றும் துர்கி தேவி என 2 மனைவிகள் உள்ளனர்.



குடும்ப ஓய்வூதியத்திற்கு பஹொரா ராம் தனது 2-வது மனைவி துர்கி தேவியின் பெயரையும் சேர்த்துள்ளார். அதேவேளை, பஹொலா ராம் உயிரிழந்த பின்னர் குடும்ப ஓய்வூதியம் அவரது முதல் மனைவி ராம்கு தேவி பெற்று வந்தார். இந்நிலையில், ராம்கு தேவி கடந்த 2015-ம் ஆண்டு உயிரிழந்தார்.ராம்கு தேவியின் மரணத்தை அடுத்து குடும்ப ஓய்வூதியம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என பஹொலா ராமியின் 2-வது மனைவி துர்கி தேவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜொதிஸ்னா ரிவால் டுவ், “முதல் மனைவி இருக்கும்போதே பஹொலா ராமி மனுதாரரை 2-வது திருமணம் செய்துகொண்டுள்ளார்.ஆகையால், 2-வது மனைவியாக குடும்ப ஓய்வூதியம் பெற மனுதாரருக்கு உரிமையில்லை என உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவை படிக்க:-

https://www.livelaw.in/pdf_upload/hp-hc-pension-429512.pdf

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback