Breaking News

07.08.2022 நாளை 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை - சென்னை வானிலை மையம்

அட்மின் மீடியா
0

மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நாளை 07.08.2022 கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் 08.08.2022 கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

9ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:-

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback