Breaking News

கோழிப்பண்ணை தொடங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கோழிப்பண்ணை தொடங்க விரும்புபவர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் 25,000 மற்றும் அதற்கு மேற்பட்ட கோழிகள் கொண்ட கோழிப்பண்ணைகள் தொடங்குதல் மற்றும் நடத்துவதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பின்பு கோழிப்பண்ணைகள் அமைப்பதற்கான விதி தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரப்படுகிறது.

அதன்படி 01.01.2023 முதல் 5,000 கோழிகள் மற்றும் அதற்கும் மேல் எண்ணிக்கை உள்ள கோழிப்பண்ணைகள் தொடங்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.

ஆகவே புதிய சுற்றுச்சூழல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 5,000 கோழிகள் மற்றும் அதற்கும் மேல் எண்ணிக்கையில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளும் இயங்குவதற்கு 01.01.2023 முதல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) ஒப்புதல் (CTE / CTO) பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கோழிப்பண்ணையாளர்கள் அனைவரும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற உடனடியாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback