எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்..! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டை, T.T.K. சாலை, கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் 17.07.2022 – ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு, கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பில், சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்