Breaking News

பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் ... முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டபடிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டமேற்படிப்பு மற்றும் பிஜி.டி.எல்.ஏ தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலைநேர பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (பகுதி நேரம் - வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை). எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது.





பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பி.ஜி.டி.எல்.ஏ, மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல் ஆகிய பட்ட /பட்டமேற்படிப்பு/பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக பணி புரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ. (தொழிலாளர் (மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட, பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணையை வெளியிட்டுள்ளது

விருப்பமுள்ள +2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு

தபால் மூலம் விண்ணப்பங்கள் பெற விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ 200/- (SC/ST ரூ. 100/-) வங்கி வரைவோலையினை 'The Director TamilNadu Institute Of Labour Studies, Chennai" என்ற பெயரில் எடுத்து பதிவுத்தபால் விரைவு அஞ்சல் / கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வு முடிவுகள் வந்த தேதியிலிருந்து 5 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு, பிஜி.டி.எல்.ஏ (பகுதி நேரம்) மற்றும் டி.எல்.எல் ஏ.எல் (பகுதி நேர வார இறுதி) 

பட்டய படிப்புக்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 22.07.2022


மேலும் விவரங்களுக்கு : 

ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை)

முனைவர் இரா.ரமேஷ்குமார்,

உதவிப்பேராசிரியர் / Head Of Department

Mob. No. 9884159410

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்

மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்)

அம்பத்தூர், சென்னை 600 098

தொலைபேசி எண் 044 - 29567885 / 29567886 Email:tilschennai@tn.gov.in


மேலும் விவரங்களுக்கு:-

https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr200722_t_1219.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback