Breaking News

அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

அட்மின் மீடியா
0

அதிமுக தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அருகே பயங்கர மோதல். ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகிய இரு தரப்பினரும் கற்களையும் கட்டைகளையும் கொண்டு தாக்கி கொள்வதால் பெரும் பதட்டம்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 9.15 மணிக்கு கூடுகிறது. அதே சமயம் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள காலை 7 மணிக்கு தன்னுடைய இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். 

அதேசமயம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளார். இதற்கு முன்பாகவே அதிமுக தலைமை அலுவலகத்தின் வாயிலில் அக்கட்சியின் தொண்டர்கள் குவிந்தனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே அலுவலகத்தின் முன்பாக கைகலப்பு ஏற்பட்டது. 

நடுரோட்டில் சண்டையிட்டு கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கி கொண்டனர். 


வீடியோ பார்க்க:-

 https://twitter.com/AjeethK_/status/1546334533225553921

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback