சூதாட்டக்காரர்களை ஏமாற்ற குஜராத்தில் நடைபெற்ற போலி ஐபிஎல் போட்டி!! வீடியோ
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போலியாக ஐபிஎல் போட்டிகளை நடத்திரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தெரியவந்துள்ளது
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொலிபூர் கிராமத்தில் ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றுவதற்காக போலியாக ஐ.பி.எல் தொடர் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் கிரிக்கெட் வீரர்களாக விவசாய கூலிகள், தொழிலாளர்கள் ஆகியோர் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிந்து விளையாடியுள்ளனர்.
ஐபிஎல் என்ற யூடியூப் பக்கத்தில் இந்த போலி ஐபிஎல் போட்டிகள் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. இதில் விளையாடிய விவசாய கூலிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஒரு போட்டிக்கு ரூ.400 வழங்கப்பட்டுள்ளது.. உண்மையான ஐபிஎல் தொடர் முடிந்த மூன்று வாரங்களுக்கு பின்னர் இந்த ஐபிஎல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த போலி போட்டியில் ஹெச்டி கேமராக்கள், வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.உண்மையான கிரிக்கெட் போட்டிபோல் இருக்க இணையத்தில் இருந்து கூட்டத்தின் சத்தத்தை பதிவிறக்கம் செய்தனர். யூடியூப்பில் லைவாக ஒளிபரப்பப்பட்டது. டெலிகிராம் தளம் மூலம் பணப்பரிவர்த்தனை நடந்தது."இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக்" என்று அழைத்துக் கொள்ளப்பட்ட இந்த ஆட்டம் காலிறுதிப் போட்டிவரை சென்றுள்ளது
ரஷ்யாவை சேர்ந்த சூதாட்டக்காரர்கள் உண்மையான இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக்" போட்டித்தான் என்று டெலிகிராம் சேனலில் பந்தயம் கட்டியுள்ளார்கள்
போலி கிரிக்கெட் அமைப்பாளர் வாக்கி-டாக்கியில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை சிக்னல் செய்யும்படி நடுவரிடம் தெரிவிப்பார் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளரிடம் அதையே நடுவர் தெரிவித்தார். போலி ஐ.பி.எல் போட்டி தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலி ஐபிஎல் போட்டி வீடியோ
Tags: இந்திய செய்திகள்