Breaking News

தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட பயணி வேகமாக வரும் ரயில் உடனே காப்பாற்றிய போலீசார்- பதபதைக்க வைக்கும் வீடியோ

அட்மின் மீடியா
0

பெங்களூரு கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் வழக்கம் போல் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மற்றொரு புறம் உள்ள நடைமேடைக்கு செல்வதற்காக ஒரு நபர் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார். நடைமேடை உயரமாக இருந்ததால் அவரால் ஏற முடியவில்லை நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது உடனடியாக கவனித்த ரயில்வே போலீசார் விரைந்து சென்று அந்த நபரை மீட்டு நடைமேடைக்கு கொண்டு வந்தனர்.ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சகம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது..

வீடியோ பார்க்க:-

https://twitter.com/RailMinIndia/status/1548207699565084674

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback