பார்ட் டைமில் B.E., B.Tech., படிப்பு படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
பகுதி நேரமாக பார்ட் டைமில் B.E., B.Tech., படிப்பு படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2022-23ஆம் கல்வியாண்டிற்குத் தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. அரசினர் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 013
2. அரசினர் பொறியியல் கல்லூரி, சேலம் - 636 011
3. அரசினர் பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி - 627 007
4. அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி – 630 004
5. தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, வேலூர் - 632 002
6. அரசினர் பொறியியல் கல்லூரி, பர்கூர் - 635 104
7. பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 004
8. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் - 641 014
9. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை - 625 015
கல்விதகுதி:-
விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருந்தவராகவோ இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசிநாள்:-
03.08.2022
Tags: கல்வி செய்திகள்