Breaking News

கள்ளகுறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியர் என 5 பேர் கைது!

அட்மின் மீடியா
0

 சின்னசேலம் தனியார் பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார்

கள்ளகுறிச்சி மாவட்டம்  கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்தனர். 

இந்நிலையில்  நேற்றைய போராட்டம் வன்முறையாக வெடித்தது . இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு நிலையில் , ஜூலை 31ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்னசேலம் நயினார் பாளையத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

உடனடியாக வன்முறை நடந்த இடத்தை உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய டிஜிபி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவி மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மாணவியின் மரணம் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மாணவி மர்ம மரணம் தொடர்பாக வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback