Breaking News

குருப் 4 தேர்வு எழுத போறிங்களா!!! இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்... முழு விவரம்

அட்மின் மீடியா
0

குரூப் 4 தேர்வர்களுக்கான பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த விரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 




குரூப் 4 தேர்வு எழுத வருவோர் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர வேண்டும். 9 மணிக்கு OMR தாள்கள் வழங்கப்படும்.

12.45 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் யாரும், தேர்வறையை விட்டு வெளியேறக்கூடாது. 

OMR தாளில் கருப்பு பால் பாய்ண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்,

OMR தாளில் பதிவு எண்ணை கட்டாயமாக குறிப்பிட வேண்டும். 

OMR தாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களை தேர்வர்கள் விடைகளாக குறிக்கக்கூடாது. விடைதெரியாத கேள்விக்கு OMR தாளில் உள்ள E என்கிற கட்டத்தில் குறிக்க வேண்டும்.

மேலும், தேர்வு எழுத வருபவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். 

செல்போன்கள் மற்றும் இதர பொருட்களைத் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை 

ஹால் டிக்கெட், புகைப்படம், பேனா தவிர வேறு எதையும் எடுத்துவரக்கூடாது

முறைகேட்டில் ஈடுபட்டால் தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் ” என்று தெரிவிக்கப்படுள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback