Breaking News

வருமான வரி தாக்கல் செய்ய 31 ம் தேதி கடைசி நாள் -கால அவகாசம் இல்லை - மத்திய அரசு

அட்மின் மீடியா
0

வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகும், காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என  வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 


எனவே அனைவரும் இறுதி காலக்கெடுவுக்கு முன்பாகவே ங்களது வருமான வரி கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்து விடுங்கள்

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சதத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருகிற டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம், ஜனவரி, முதல் மார்ச் வரை, ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback