Breaking News

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு


சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் ஜூலை 28-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்துகளை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback