ஜூலை 15 முதல் நாடுமுழுவதும் கொரோனா பூஸ்டர் டோஸ் இலவசம்..
2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் பரவ தொடங்கிய கொரானாவை கட்டுபடுத்த கொரானா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூலம் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முதலில் 2 தவணையாக தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தேவைப்படுவோருக்கு பூஸ்டர் டோஸும் போடப்பட்டு வருகிறது.
தற்போது கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளதால் மாநில அரசுகள்
தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், ‘18-59
வயதுக்குட்பட்டவர்கள் 75 நாள் சிறப்பு இயக்கத்தின் கீழ் அரசு தடுப்பூசி
மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் போடப்படும் என்று மத்திய
அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 15-ம் தேதி முதல் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 75 நாள் சிறப்பு இயக்கத்தின் கீழ் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக கொரோனா தடுப்பு பூஸ்டர் டோஸ் போடப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது
Tags: இந்திய செய்திகள்