அதிமுகவில் புதிய 14 மாவட்ட செயலாலர்களை அறிவித்த ஒ.பன்னீர் செல்வம் முழு விவரம்.
அதிமுகவில் ஏட்டிக்கு போட்டி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஓபிஎஸ்சின் ஒருங்கிணைப்பாளர் பதவியையும், பொருளாளர் பதவியையும் பறித்து அதற்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் ஆனார். பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார். மேலும் ஓபிஎஸ் உட்பட அவர் ஆதரவாளர்கள் அனைவரையும் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கம் என்று அறிவித்தார்.
அதேபோல் எடப்பாடி பழனிச்சாமியையும், அவரது ஆதரவாளர்களையும் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம் என்று ஓபிஎஸ் அறிவித்தார். ஆனால் அதிமுகவின் அலுவலக சாவியை எடப்பாடி இடம் ஒப்படைக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுகவின் வங்கி கணக்குகளை புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கவனிக்க வங்கிகள் அங்கீகரித்து விட்டன. இதை எதிர்த்து ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து ஓபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு . இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.அவர்களின் விவரம்:
1. வெங்கட்ராமன் - கழக வர்த்தக அணிப் பிரிவுச் செயலாளா்சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.
2. தர்மர் - இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளா்
3 கோபாலகிருஷ்ணன் - மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளா்
4, செல்வராஜ் - கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்
5. கொளத்தூர் 0. கிருஷ்ணமூர்த்தி - வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்.
6. பாபு,தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்.
7. அம்பிகாபதி - தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளா்.
8. ரமேஷ் - வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளா்
9. ராஜ்மோகன்- திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளா்
10. மகிழன்பன் - வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்
11. அசோகன் - சிவங்கை மாவட்டக் கழகச் செயலாளா்
12. ரஞ்சித் குமார் - காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்.
13. சிவலிங்கமுத்து - திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.
14. கணபதி - தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர். “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்