Breaking News

நுபுர் சர்மாவை ஆகஸ்ட் 10ம் தேதி வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை

அட்மின் மீடியா
0
நூபுர் சர்மாவை ஆகஸ்ட் 10ம் தேதி வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை


கடந்த மாதம் சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின் போது முகமது நபிகள் குறித்து சர்ச்சையான முறையில் அவதூறான வகையில் பேசினார். தொடர்ந்து, மற்றொரு பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைகுரிய வகையில் ட்வீட் செய்திருந்தார். நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். அது மட்டுமின்றி அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நபிகள் குறித்ததான சர்ச்சை கருத்து காரணமாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி பா.ஜ.க-வின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது பா.ஜ.க

மேலும் இந்த செய்தி இது அரபு நாடுகளுக்கும் பரவத் தொடங்கி பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது பாஜக . சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் முகமது நபி பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு தீவிர கண்டத்தை தெரிவித்துள்ளார்கள்

வளைகுடா நாடுகள், இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனது.சர்ச்சைப் பேச்சு பேசிய நூபுர் சர்மா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில், நுபுர் சர்மா தன் மீதான அனைத்து வழக்குகளையும்  டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 
 
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நுபுர் சர்மா மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஏன் ஒரே இடத்திற்கு மாற்றக்கூடாது என மாநிலங்கள் மற்றும் மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுள்ளது. மேலும்  நீதிபதிகள் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை அவரைக் கைது செய்ய இடைக்காலத் தடையையும் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback