நிலத்தடி நீருக்கு ரூ10,000 கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது
மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்
நீச்சல் குளம், சுரங்கத் திட்டங்கள், தொழிற்சாலைகள், தண்ணீர் விநியோகிப்பாளர்கள், குடியிருப்பாளர் நலச் சங்கங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உட்பட அனைத்து நிலத்தடி நீர் பயன்பாட்டாளர்களும், ஜூன் 30ம் தேதிக்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம், நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற வேண்டும். எனவும்மேலும் விண்ணப்பம் அளிக்கும்போது ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் ஒருவேளை, மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் தடையில்லா சான்று பெறாமல் தொடர்ந்து நிலத்தடி நீர் எடுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
ஆனால் மத்திய அரசின் இந்த திட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது என நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அறிவித்துள்ளார்
நிலநீர் பாதுகாப்பு & நீர் எடுத்தல் சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் நிலத்தடி நீருக்கு ரூ10,000 கட்டணம் என்று மத்திய அரசின் உத்தரவு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்