Breaking News

பசுவுக்காக இஸ்லாமியர் கொல்லப்படுகிறார்கள்- நடிகை சாய் பல்லவி பேசியது என்ன? முழு விவரம்....

அட்மின் மீடியா
0

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. 

இந்நிலையில் தெலுங்கில் விராட பருவம் என்கிற படத்தை கைவசம் வைத்துள்ளார் சாய் பல்லவி. இப்படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார் சாய் பல்லவி. ராணா, பிரியாமணி, நிவேதா பெத்துராஜ் என பலர் நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் 17-ந் தேதி திரைக்கு வர உள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் புரமோஷனுக்காக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நடிகை சாய் பல்லவி 

நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள். என்னை பொருத்த வரை வன்முறை என்பது தவறான விஷயம். நான் நல்ல மனிதராக இருக்க வேண்டும் மக்களுக்கு துணையாக நாம் இருக்க வேண்டும். அதைத்தான் என் குடும்பம் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளது. நீங்கள் மனிதராக இருந்தால் அதைத்தான் செய்ய வேண்டும். 

என்னை பொருத்தவரை காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் சொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் கொலை மற்றும் மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தி தாக்குதல் நடத்தியது ஆகிய இரண்டிற்கு பெரிய வேறுபாடுகள் இல்லை.யாராக இருப்பினும் எந்த சூழ்நிலையாக இருப்பினும் ஒடுக்கப்பட்டவர்கள் நிச்சயம் பாதுக்கப்பட வேண்டும். 

வலது சாரி, இடது சாரி இதில் எது சரி என எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் நல்ல மனிதராக இருக்க வேண்டும் நீங்கள் நல்ல மனிதராக இருந்தால் அதைத்தான் செய்ய வேண்டும். காஷ்மீரி இந்து பண்டிட்கள் கொலை செய்யப்படுவதற்கு குரல் கொடுக்கும் மக்கள் இதற்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அவர் பேசி உள்ளார். 

தற்போது இணையத்தில் சாய்பல்லவிதான் டிரெண்டாகி வருகின்றார். சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback