Breaking News

பள்ளி வாகனங்களில் கேமரா, மற்றும் ரிவர்ஸ் சென்சார் கட்டாயம்!! தமிழக அரசு அதிரடி!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமரா மற்றும் சென்சார் கருவிகளை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


இது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்

பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் அனைத்து வகையான பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும் கட்டாயமாக சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். 

வாகனத்தின் முன்பதியில் ஒரு கேமராவும், பின் பகுதியில் ஒரு கேமராவும் என 2 கேமராக்களை பொருத்த வேண்டும். 

வாகனத்தை பின்னால் எடுக்கும் போது ஓட்டுனரின் பார்வைக்கு படும்படியான வசதிகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

பள்ளி வாகனங்கள்மேலும் வாகனத்தின் 4 புறங்களிலும் சிக்னல் கொடுப்பதற்கான சென்சார் பொருத்தப்பட வேண்டும். 

இதன் மூலம் வாகனம் ஏதோ ஒன்றின் மீது மோதும் நிலை ஏற்பட்டால், சென்சார் கருவி மூலம் சிக்னல் கிடைக்கும் வகையில் ஒலிக்கும் வகையில் அவை பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். 

மேலும் இந்த நடைமுறைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback