Breaking News

அமிரக தொழிலாலர்களுக்கு நடைமுறைக்கு வந்த மதிய ஓய்வு இடைவேளை..!! முழு விவரம்...

அட்மின் மீடியா
0
அமீரகத்தின் மூன்று மாத காலத்திற்கான மதிய இடைவேளைத் திட்டம் வரும் ஜூன் 15 முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் துறை அறிவித்திருக்கிறது. 



இத்திட்டம், வெயிலில் பணிபுரிபவர்களுக்கான நண்பகல் 12.30 முதல் பிற்பகல் 3 மணி வரையிலான ஓய்வு நேரத்தை உறுதிசெய்கிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பை முன்னிட்டு இத்திட்டத்தை அறிவித்திருக்கும் மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் துறையினர்  அவசர பணிகளுக்கு இத்திட்டத்தில் விலக்கு அளிக்கப்படும் என கூறியுள்ளார்கள்

நாட்டில் தொடர்ந்து 18வது ஆண்டாக இந்த மதிய இடைவேளை திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்படுகிறது. மேலும் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் நீர்ச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாதவண்ணம் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்குதல், முதலுதவி மற்றும் கொரோனா நோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுதல் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்

இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளவைகள்:-


கான்கிரீட் ஊற்றுவது போன்ற திட்டப்பணிகள்.

ஆபத்தைத் தடுக்க மேற்கொள்ளப்படும் வேலை

சேதங்கள் அல்லது செயலிழப்புகளை சரிசெய்தல்

தற்செயலான அவசர இழப்புகளைத் தடுத்தல்

தண்ணீர் குழாய்கள், கழிவுநீர் குழாய்கள் அல்லது மின் இணைப்புகளில் உள்ள தடைகளை சரி செய்தல்

பொதுச் சாலைகள் மற்றும் எரிவாயு அல்லது எண்ணெய் குழாய்களில் ஏற்படும் இடையூறுகளை சரிசெய்தல் போன்ற தொழில்நுட்ப காரணங்களுக்காக ஒத்தி வைக்க முடியாத பணிகளில் தொழிலாளர்கள் பணிபுரிந்தால்  தடை செய்யப்பட்டுள்ள நேரங்களிலும் அவர்கள் பணிபுரியலாம். 

மேலும் இந்த மதிய இடைவேளையை மீறும் நிறுவனங்களுக்கு ஒரு தொழிலாளிக்கு 5,000 திர்ஹம் என அபராதம் விதிக்கப்படும் என்றும்  புகார் அளிக்க காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 600590000 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback