Breaking News

பாலக்கோடு தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிந்துரை!

அட்மின் மீடியா
0

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மாதம்பட்டி பகுதியில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த மே மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் 18ஆம் தேதி வரை ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  



தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கடந்த 16ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது சேலம், திருப்பத்துர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயிற்சியில் 454 பேர் பங்கேற்றது உறுதி செய்யப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ள, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.








Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback