Breaking News

12ம் வகுப்பு படித்தவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்க விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கும் வகையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வி திட்டம்’ என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் (2022 - 2023) இணைப்பு கல்லூரிகளில் (அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகள்) சேர பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க சென்னை பல்கலை., முடிவெடுத்துள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் 2022-2023 கல்வியாண்டில் மாணவர்கள் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க தகுதிகள்:

முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வரும் மாணவர்கள், 
 
உடல் ஊனமுற்றவர்கள்,
 
திருநங்கைகள்

பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற பிள்ளைகள் 

12 ம் வகுப்பில் 80 % மதிப்பெண் எடுத்தவர்கள்

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.


இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

 
விண்ணப்பிக்க:


 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 

 
12 ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிட்ட 15 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம்
 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback