உத்திரபிரதேசத்தில் நுபுர்சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி போராடியவர்களின் வீடுகள் இடிப்பு வீடியோ
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே மகாராஷ்டிரா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் டெல்லியில் நுபுர்சர்மா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் மோசமான கருத்துகளை நுபுர் சர்மா தெரிவித்திருந்தார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பிரமுகர்கள் உள்ளிட்டோர் மீது ஒரு வாரத்திற்கு பின்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த வாரம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின் போது முகமது நபிகள் குறித்து சர்ச்சையான முறையில் அவதூறான வகையில் பேசினார். தொடர்ந்து, மற்றொரு பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைகுரிய வகையில் ட்வீட் செய்திருந்தார். நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். அது மட்டுமின்றி அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நபிகள் குறித்ததான சர்ச்சை கருத்து காரணமாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி பா.ஜ.க-வின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது பா.ஜ.க
மேலும் இந்த செய்தி இது அரபு நாடுகளுக்கும் பரவத் தொடங்கி பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது பாஜக . சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் முகமது நபி பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு தீவிர கண்டத்தை தெரிவித்துள்ளார்கள்
வளைகுடா நாடுகள், இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனது.சர்ச்சைப் பேச்சு பேசிய நூபுர் சர்மா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நுபுர்சர்மாவை கைது செய்யவேண்டும் என போராட்டம் நடத்தினர். இதில் மொரதாபாத், பிரக்யாராஜ் ஆகிய இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாரன்பூர் வன்முறை தொடர்பாக முசாமில் மற்றும் அப்துல் வாகிர் ஆகியோர் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. அதாவது வீட்டின் காம்பவுண்ட் சுவர் மற்றும் முன்பகுதி ஆகியவை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி இடித்து அகற்றப்பட்டது.
நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சால் உத்தர பிரதேச மாநிலம் சாரன்பூரில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வன்முறையில் ஈடுபட்டால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/NewsArenaIndia/status/1535598480621707265
https://twitter.com/Indian_Analyzer/status/1535829391984369664
Tags: இந்திய செய்திகள்