நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி உத்திரபிரதேசத்தில் நடந்த பிரமாண்ட ஆர்ப்பாட்டம் வீடியோ
முகமது நபி குறித்து கருத்து தெரிவித்ததற்காக தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்யக் கோரி உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது.
உத்திரபிரதேச மாநிலம், பரேலியில் நேற்று இத்தேஹாத்-இ-மில்லத் பேரவையின் (IMC) சார்பாக நுபுர் சர்மா கைது செய்ய கோரி நடத்திய ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய மௌலானா தௌகிர் ரஸா கான், இந்த நேரத்தில் நாட்டில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், இதனை முழு உலகிற்கும் எடுத்துரைப்பேன் எனவும், நூபுர் ஷர்மாவை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும் நுபுர் சர்மாவைக் கைது செய்ய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ