நுபுர்சர்மா சர்ச்சை...ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் ஓட ஓட வெட்டிக்கொலை...முழுவிவரம்
பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. அதற்க்கு இந்தியாவிலும், அரபு நாடுகளிலும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. மேலும் அவரை கைது செய்ய வலியுறுத்தி தற்பொழுது வரை நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை வைத்திருந்த கண்ணையா லால் என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த நிலையில், இன்று அவர் கடையில் இரண்டு இஸ்லாமியர்கள் புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்
உதய்பூர் மால்தாஸ் தெருவில் உள்ள பூத்மஹால் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. கண்னையா லால் என்பவரின் கடைக்கு துணி தைக்க அளவு எடுக்க வந்தது போல் சென்ற 2 இஸ்லாமியர்கள் கத்தி மற்றும் வாளுடன் அவரை பட்டபகலில் ஓட ஓட துரத்தி வெட்டியுள்ளார்கள் சம்பவ இடத்திலேயே கன்னையாலால் இறந்துள்ளார்.
கொலை செய்வதற்கு முன்பும் பின்பும் அதை வீடியோவாக எடுத்து கொலையாளிகள் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்செயலைக் கண்டித்து அப்பகுதியில் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் குற்றம் சாட்டபட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என போலிசார் தெரிவித்துள்ளார்கள்
Tags: இந்திய செய்திகள்