பெற்றோர்களே உஷார்!! குழந்தை மீது ஏறி இறங்கிய கார்.. வெளியான ஷாக்கிங் சிசிடிவி வீடியோ..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், அதே பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் தருண் (2) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, குழந்தையின் மீது கார் இருமுறை ஏறி இறங்கி உள்ளது.இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே, சுதாரித்துக்கொண்ட டிரைவர் காரை நிறுத்தியுள்ளார். பின்னர் பொதுமக்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தையின் மீது கார் ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ