Breaking News

அதிமுக வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழு அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு

அட்மின் மீடியா
0

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்!

 


சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் மேடையில் அமர்ந்துள்ளனர். 

அப்போது பொதுக்குழு தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிவார் என்று மேடையில் அறிவிக்கப்பட்ட நிலையில், சிவி சண்முகம் குறுக்கிட்டு அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக முழக்கமிட்டு ஆவேசத்துடன் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டனர். அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பது தான். இதனால், ஒற்றை தலைமை தேர்ந்தெடுத்த பின்னர், அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமி மேடையில் தெரிவித்தார் முன்னதாக மறைந்த அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவில் இரங்கல் குறிப்பை வாசித்தார் முன்னாள் அமைச்சர் செம்மலை. அத்துடன் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback