பள்ளி கல்லூரிகளில் மாணவ,மாணவியர் முககவசம் அணிய வேண்டும் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை முக கவசம் அணிய அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், தொற்று பாதித்த நபர்களுக்கும், தொற்றிற்கான அறிகுறியுள்ள நபர்களுக்கும் மாநகராட்சியின் சார்பில் இலவசமாக பாரசிட்டமால் 500 மி.கி., வைட்டமின் சி 500 மி.கி. மற்றும் ஜிங்க் 50 மி.கி. ஆகிய மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் தலா 500 மாத்திரை தொகுப்புகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்