உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பெண் தபேதார் நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் உதவியாளர்களாக தபேதார்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். சிகப்பு தலைப்பாகை, கையில் செங்கோல் வெள்ளை உடை அணிந்து இவர்கள் நீதிமன்றங்களில் பணியாற்றுவார்கள்.இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் தபேதாரராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள மஞ்சுளாவுக்கு உதவியாக திலானி என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இந்த பணிக்கு சேர்ந்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்