ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் கட்டணம்- மீறினால் 6 மடங்கு அபராதம்
இனி ரயிலில் கூடுதல் லக்கேஜ்ஜுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் இதனை மீறினால் 6 மடங்கு அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது
ஏசி முதல் வகுப்பில் பயணிப்பவர்கள் 70 கிலோ லக்ஜேஜ்களை இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
ஏசி இரண்டாம் வகுப்பில் பயணிப்பவர்கள் 50 கிலோ லக்கேஜ்களை இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
ஏசி 3 வகுப்பில் ஸ்லீப்பர் டயர்களில் பயணிப்பவர்கள் 40 கிலோ லக்கேஜ்களை இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
ஸ்லிப்பர் செல் வகுப்பில் பயணிப்பவர்கள் 35 கிலோ லக்கேஜ்களை இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
இந்த சூழலில் அனுமதிக்கப்பட்டுள்ள எடைக்கு மேல் பயணிகள் லக்கேஜ்களை எடுத்துச்செல்வது தெரியவந்தால் கூடுதலாக 6 மடங்கு அபராதமாக கட்டவேண்டியது இருக்கும் என இந்திய ரயில்வேதுறை எச்சரித்துள்ளது
கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல விரும்புவோர் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் லக்கேஜ் புக்கிங் அலுவலகத்தில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் "அதிக லக்கேஜ்கள் ரயில் பயணத்தின் மகிழ்ச்சியை பாதியாகக் குறைக்கின்றன. ரயிலில் பயணம் செய்யும் போது அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் செல்லாதீர்கள். உங்களிடம் அதிகப்படியான சாமான்கள் இருந்தால், பார்சல் அலுவலகத்திற்குச் சென்று லக்கேஜை முன்பதிவு செய்யுங்கள்" என பதிவிட்டுள்ளது.
டிவிட்டர் பதிவு:-
Tags: இந்திய செய்திகள்