Breaking News

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனைக்கு மத்தியிலும் சாதித்த இஸ்லாமிய மாணவி! 12ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 2 வது இடம்

அட்மின் மீடியா
0

12ம் வகுப்பு தேர்வில் கர்நாடக மாநில அளவில் 2ம் இடம் பிடித்து சாதித்துள்ளார் இஸ்லாமிய மாணவி இல்ஹாம்!



கர்நாடகா மாநிலத்தில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 22ல் துவங்கி மே 18 வரை நடைபெற்றது.இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பி.யு., போர்டு அலுவலகத்தில் கடந்த 17ம் தேதி காலை 11:00 மணிக்கு, தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ், தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 

இந்நிலையில், ஹிஜாப் பிரச்சனையிலும் கல்வியில் கவனம் எழுத்தி தேர்வு எழுதிய இஸ்லாமிய மாணவி இல்ஹாம் 600க்கும் 597 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.  


மங்களூருவில் உள்ள செயின்ட் அலோசியஸ் பள்ளி மாணவியான இல்ஹாம், 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ துறையில் பணியைத் தொடர விரும்பியதால் இதனை சாதித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி இல்ஹாம் கூறுகையில், “இது கடினமான நேரம். இருப்பினும், எனது நோக்கம் தெளிவாக இருந்தது, எனது கவனம் படிப்பில் இருந்தது. என்னைப் போல பல மாணவிகள் தேர்வு எழுதியிருந்தால் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source:-


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback