சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியாகும்?
சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியாகும்?
2021-22ம் கல்வியாண்டில் 10 ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை இரண்டு பருவங்களாக சிபிஎஸ்சி நடத்தியது. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் முதல் பருவத் தேர்வும்,
அதேபோல் 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 2ம் பருவத்தேர்வும் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகாத நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
CBSE கல்வி வாரியத்தின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதியுள்ள மாணவர்களுக்கு தேர்வு குறித்த இறுதி முடிவுகள் இம்மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிபிஎஸ்இ பாடத்தின் கீழ் பத்தாம் வகுப்புக்கான இரண்டாம் பருவத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Tags: கல்வி செய்திகள்