Breaking News

நாளை மறுநாள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்- தேர்வுதுறை

அட்மின் மீடியா
0

நாளை மறுநாள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்



தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வு 31ம் தேதியும் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும் முடிவடைந்தது. மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆனது ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்க்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,கடந்த திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன

தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் 17-ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback