Breaking News

ஜூலை 1 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு முழு விவரம்....

அட்மின் மீடியா
0

திருநெல்வேலி , செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை - செங்கோட்டை இடையே ஜூலை 1 ம் தேதி முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் 

நெல்லையிலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு காலை 11.25 மணிக்குச் செங்கோட்டைச் செல்லும் . 

மறுமார்க்கத்தில் நெல்லையிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.15 மணிக்குச் செங்கோட்டைச் சென்றடையும் 

செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் 

செங்கோட்டையில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு நெல்லை சென்றடையும். 

இதே மார்க்கத்தில் மற்றொரு ரயில், செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12.25 மணிக்கு நெல்லை சென்றடையும் 

இந்த ரயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன் மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை- செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில்

மதுரையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 03.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். 

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மாலை 03.35 மணிக்கு மதுரை வந்து சேரும். 

இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்செந்தூர்-திருநெல்வேலிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

திருச்செந்தூரிலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். 

மறுமார்க்கத்தில் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06409) திருநெல்வேலியில் இருந்து மாலை 04.05 மணிக்கு புறப்பட்டு மாலை 05.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். 

இந்த ரயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்

என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback