Breaking News

மாஸ்க் ஆதார் என்றால் என்ன !! டவுன்லோடு செய்வது எப்படி!!

அட்மின் மீடியா
0

மாஸ்க் ஆதார் என்றால் என்ன:- 

 

மாஸ்க் ஆதார் கார்டு என்பது ஆதார் கார்டில் உள்ள ஆதார் நம்பரை ரகசியமாக வைப்பதாகும். 


இந்த மாஸ்க் ஆதார் கார்டில் உள்ள கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே காண்பிக்கப்படும். மற்ற எண்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிடும். ஆரம்பத்தில் உள்ள 8 இலக்கங்களிலும் ’X' என்ற குறியீடுதான் இருக்கும். அதில் இருக்கும் இலக்கங்கள் என்ன என்பதை யாராலும் பார்க்க முடியாது

இந்த மாஸ்க் ஆதார் கார்டை டவுன்லோடு செய்வதற்கு ஆதாரின் இணையதளத்தில் டவுன்லோடு செய்யும் முன் அதில் வழக்கமான ஆதார் வேண்டுமா அல்லது மாஸ்க் ஆதார் வேண்டுமா என்று தேர்வு செய்ய வேண்டும்.


  • முதலில் https://eaadhaar.uidai.gov.in/#/ என்ற ஆதார் ஆணையத்தின் லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
  • அடுத்து  அந்த லின்ங்கில் உங்கள் ஆதார் எண் பதிவிடுங்கள் அத்ன் மேஉ மாஸ்க் என்பதை கிளிக் செய்யுங்கள். பின்பு  கீழ் உள்ள  பாதுகாப்புக் குறியீட்டு எண்களை டைப் செய்யவும். பின்பு SEND OTP  என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
  • அடுத்து ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு 6 நம்பர் பாஸ்வேர்டு அனுப்பப்படும்
  • அதை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்து
  • Download Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்தால் ஆதார் கார்டை டவுன்லோட் செய்துவிடலாம்.
  • நீங்கள் டவுன்லோடு செய்த ஆதார்கார்டு பாஸ்வேர்டு போடபட்டு இருக்கும்
  • அதனை நீங்கள் ஓப்பன் செய்ய உங்கள் பெயரின் முதல் 4 எழுத்துகள் கேப்பிட்டல் லட்டரில் டைப் செய்யவேண்டும் பின்பு உங்கள் பிறந்த வருடம் டைப் செய்ய வேண்டும்.

EX:   KUMA1990

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback