Breaking News

சென்னையில் சொகுசு கப்பல் முன்பதிவு செய்வது எப்படி...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

சென்னை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சொகுசு கப்பல் சேவையை வருகிற ஜூன் 4 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

 

இந்த சொகுசுக் கப்பல் கோர்டெலியா குரூசிஸ் நிறுவனத்தின் இந்த சொகுசுக் கப்பலில் உணவகங்கள் , நீச்சல் குளம், பார், திறந்தவெளி திரையரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, ஜிம் போன்ற ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

 
சென்னை துறைமுகத்திலிருந்து சொகுசு கப்பல் ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீண்டும் துறைமுகம் திரும்பும் வகையில் 2 நாள் சுற்றுலா திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் சொகுசு கப்பல் பயணத்திட்டமும் தொடங்கப்படவுள்ளது. 

மேலும் இந்த சொகுசு கப்பலில் 2 நாள், 3 நாள், 4 நாள் 5 நாள் என பயணதிட்டங்களும், சென்னை, விசாகப்பட்டினம் கொச்சி, மும்பை லட்சதீவு, புதுச்சேரி,கோவா  என அனைத்து இடங்களிலும் பயண திட்டம் உள்ளது


முன்பதிவு செய்ய:-

https://www.cordeliacruises.com/





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback