கேரளாவில் பரவும் தக்காளி வைரசுக்கும், தக்காளிக்கும் எந்த தொடர்பும் இல்லை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது ஒருவகையான காய்ச்சல்தான், இதனால் பெரிய பாதிப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வரும் இதனால் தக்காளி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது
கேரளாவின் கொல்லம் பகுதியில் 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இந்நிலையில்,தக்காளிக்கும்,தக்காளி வைரஸ் தொற்றுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில்
தக்காளிக்கும் தக்காளி வைரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது ஒருவகையான காய்ச்சல்தான், இதனால் பெரிய பாதிப்பு இல்லை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முகத்தில் தக்காளி போல புள்ளிகள் வரும். இதனால் இதற்கு தக்காளி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம். இதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது” என்று கூறினார்.
Tags: தமிழக செய்திகள்