டேபிளை தூக்கி ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன் வைரல் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளியாடி பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது . இந்த மேல்நிலைப்பள்ளியில் கடந்த வியாழக்கிழமை அன்று மாணவர்கள் வகுப்பறையில் ஆட்டம் போட்டு ஆசிரியரை தாக்க முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
பதினொன்றாம் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு மாணவர் வாசலில் நின்று நடனம் ஆடுகிறார். இன்னொரு மாணவர் ஆசிரியரின் பின்னால் நின்று நடனமாடுகிறார் . ஒரு மாணவர் மேஜையின் மேல் ஏறி நின்று நடனமாடுகிறார் . இதை பார்த்து ஆசிரியர் கடுமையாக திட்டுகிறார். அப்போது ஒரு மாணவர் டெஸ்க்கை தூக்கிக்கொண்டு ஆசிரியரை அடிக்க ஆவேசமாக பாய்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வீடியோ பார்க்க:-
Tags: தமிழக செய்திகள்