மாநிலங்களவை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ப.சிதம்பரம் போட்டி
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களவை தேர்தலில் தமிழக சட்டப்பேரவையின் வலுப்படி திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்கும். அதில் திமுகவிற்கு கிடைக்கவிருக்கும் 4 இடங்களில் ஒன்றை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது
மேலும் திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என் ராஜேஷ்குமார், ரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்