Breaking News

குடியாத்ததில் ஷவர்மா விற்க தடை – நகராட்சி தலைவர் அதிரடி உத்தரவு!

அட்மின் மீடியா
0

கேரள மாநிலம் காசர்கோடு செருவத்தூர் பகுதியில் பேக்கரி கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட 30 பேர் காசர்கோடு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள் இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் கெட்டுப்போன சிக்கன் சவர்மா கொடுக்கப்பட்டதால்தான் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது


இந்நிலையில் கேரளாவில் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் காசர்கோட்டிலுள்ள அனைத்து ஷவர்மா கடைகளையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து,தஞ்சை ஒரத்தநாடில் இரு தினங்களுக்கு முன்னர் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு திடீரென வாந்தி,மயக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.தற்போது மாணவர்கள் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக உணவகங்களில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் ஷவர்மா விற்க அந்நகராட்சி தலைவர் சௌந்தரராஜன் தடை விதித்துள்ளார். மேலும், சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்றால் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் நகராட்சி தலைவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் ஷவர்மாவை விற்க தேவையான அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு வசதிகள் இல்லாத கடைகளை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்,ஷவர்மா போன்ற உணவுகளை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback