Breaking News

சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

அட்மின் மீடியா
0

கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.102.50 உயர்த்தின.வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது அதன்பின்னர் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.50 அதிகரித்தன.இதனால்,சிலிண்டர் விலை ரூ.965 லிருந்து ரூ.1015 ஆக உயர்ந்தது.



இந்நிலையில்,சென்னையில் வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்  வணிக உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.2499-லிருந்து ரூ.8 அதிகரித்து ரூ.2507 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback