ஷவர்மா போன்ற புதிய பெயர்களில் வரும் உணவுகளை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஷவர்மா போன்ற புதிய பெயர்களில் வரும் உணவுகளை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்
ஷவர்மா என்பது மேல்நாட்டு உணவு அது என்னவென்றால் கறியை ஒட்டுமொத்தமாக சுருட்டி வைத்து சுரண்டி கொடுப்பார்கள். இத்தகைய ஷவர்மா மேலைநாடுகளில் அங்குள்ள சூழலுக்கு தான் பொருந்தும்,அங்கு மைனஸ் டிகியில் வெளியில் வைத்திருந்தாலும் கெடாமல் இருக்கும்.
நமது நாட்டில் நிலவும் தட்பவெப்பதிற்கு ஷவர்மா ஒத்து வருமா? என்று யாரும் பார்ப்பதில்லை ஷவர்மாமை பதப்படுத்த முடியுமா என்றும் யாரும் பார்ப்பதில்லை.மாறாக வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக வைத்துக்கொண்டு அதை விற்பனை செய்கிறார்கள்.
முதல்வரின் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளுக்கு சென்று உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதன்படி1000 கடைகளுக்கு மேல் அபராதம்,அறிவுறுத்தல்,ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதனைத் தொடர்ந்தும்,தமிழகம் முழுவதும் ஆய்வுகள் துரிதப்படுத்தப்படும்.எனவே ஷவர்மாவை விற்க தேவையான அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு வசதிகள் இல்லாத கடைகளை மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
மக்களுக்கு ஓர் வேண்டுகோள் நமக்கான உணவு நிறைய உள்ளது.அதை விட்டுவிட்டு ஷவர்மா போன்ற புதிய பெயர்களில் வரும் உணவுகளை சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்