Breaking News

20 ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0


தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரும்பாலானோர் சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர். 



அந்த வகையில் ஊட்டி மலர் கண்காட்சி 20ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வருகிறது 

இந்நிலையில் மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு மே 20ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை ஈடு செய்யும் வண்ணம் ஜூன் 4ம் தேதி வேலை நாளாக செயல்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback