Breaking News

அபுதாபி உணவகத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து 2 பேர் பலி 100க்கும் மேற்பட்டோர் காயம்

அட்மின் மீடியா
0

அபுதாபியில் நேற்று திங்கள்கிழமை நடந்த கேஸ் சிலிண்டர் வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது

அபுதாபியின் அல் கலிதியா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் அந்த உணவகம் இருந்த கட்டிடம் மற்றும் அதற்கு அருகாமையில் இருந்த ஆறு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.

சம்பவம் நிகழ்ந்ததை அறிந்த சிவில் பாதுகாப்பு படையினர் உடனடியாக வந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். கேஸ் சிலிண்டர் வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அபுதாபி காவல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback