Breaking News

ஜூன் 1 முதல் வர உள்ள மாற்றங்கள் முழு விவரம்....

அட்மின் மீடியா
0
ஜூன் 1 ம் தேதியில் இருந்து கீழ் கண்ட மாற்றங்கள் வர உள்ளது



மதுரை - தேனி  ரயில் அட்டவணை மாற்றம்:-

மதுரை- தேனி- மதுரை பயணிகள் ரயில்களின் கால அட்டவணையில் ஜூன் 1 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மதுரை- தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06701) மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு தேனி சென்று சேரும். 

மறுமாா்க்கத்தில் தேனி- மதுரை முன்பதில்லாத விரைவு சிறப்பு ரயில் (06702) தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு வழக்கமான வருகை நேரமான இரவு 7.35 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு மதுரை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு:

ஆக்சிஸ் வங்கி வாடிக்கையளர்களுக்கு சராசரி மாத இருப்பு வரம்பை ரூ.15,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளது. ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க முடியாவிட்டால், கூடுதல் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளது


மூன்றாம் நபர் வாகனங்களுக்கான காப்பீட்டு பிரீமியம் உயர்வு:-


150சிசி மேலுள்ள இருசக்கர வாகன உபயோகிப்பாளர்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் 15 சதவீதமாக உயர்கிறது. 

அதே போல 1000சிசி முதல் 1500சிசி வரை உள்ள கார்களுக்கு 6 சதவீத பிரீமியம் தொகை உயர்த்தப்பட உள்ளது.


ிலிண்டர் விலை:-

ஒவ்வொரு மாதத் தொடக்கத்தின் முதல் தேதியிலும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஜூன் மாதத்திற்கான சிலிண்டர் விலை ஜூன் 1ம் தேதி நிர்ணயம் செய்யப்படும். இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. 


தங்க நகைகளுக்கு ஹால் மார்க் கட்டாயம்:-

தங்கநகைகள் விற்பனையை பொறுத்தவரை பல இடங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனை தடுக்கும் வகையில் தங்க நகைகளில் ஹால்மார்க் இருக்க வேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது இது குறித்து ஏற்கனவே பலமுறை அறிவிப்புகள் வந்தும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.  இந்நிலையில் ஜூன் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback