பயனிகளுடன் ஓடு பாதையில் விமானத்தில் தீ 113 பயணிகள் உயிர்தப்பினர் - ஷாக்கிங் வீடியோ
மேற்கு சீனாவில் ஓடுபாதையில் இருந்து விமானம் திபெத்திற்க்கு புறப்பட்டபோது எதிர்பாராத விதமாக திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது
சீனாவில் திபெத் ஏர்லைன்ஸ் விமானம் திபெத்தில் உள்ள நியிஞ்சிக்கு புறப்படதயாராக இருந்தது அப்போது விமானத்தின் முன்பக்கம் இடது பக்கம் திடிரென தீ பரவியதாகக் கூறப்படுகிறது.
விமானத்தில் 113 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக திபெத் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 40 பேர் லேசாக காயமடைந்ததாகவும் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதனை தொடர்ந்து தீ அணைக்கப்பட்டது தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/PMBreakingNews/status/1524566860913598466
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள்